நாளை முதல் புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி!

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த புதுச்சேரி சுற்றுலா தளங்களான கடற்கரை , பாரதி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு நாளைமுதல் அனுமதிக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!
மேலும் ஜிம் ( உடற்பயிற்சி மையங்கள் ) , தியேட்டர்கள் , பார் , நீச்சல் குளம் திறக்கப்படமாட்டாது எனவும் உள்நாட்டு விமான சேவைகள் ( புதுச்சேரி – ஐதராபாத் , பெங்களூரு’க்கு ) துவங்கும் எனவும் அவர் அறிவித்தார். புதுச்சேரியில் இரவு 9மணிமுதல் காலை 5மணிவரை ஊரடங்கு நீடிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் இரவு 9மணிவரை கடைகள் திறந்திருக்கும்.
வரும் 8ஆம் தேதிமுதல் இரவு 9மணிவரை ஹோட்டல்கள் திறந்திருக்கும் அனைவரும் சமூக இடைவெளியுடன் உணவருந்தவேண்டும். மேலும் 8ம் தேதி முதல் மால்கள் திறக்கப்படும் , மேலும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் , தேவாலயங்கள் , மசூதிகள் திறக்கப்படும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கோவிலைகளிலும் , தேவாலயங்களிலும் , மசூதிகளில் மக்கள் செல்லவேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்! மேலும் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவித்துள்ளார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *