பொறியல் ஆன வெட்டுகிளி’கள்! தமிழ்நாட்டு குடிமகனின் ரெசிப்பி 😂


கடந்த சில நாட்களாக ஜெய்ப்பூரில் படையெடுக்க துவங்கியது லோகஸ்ட் எனும் வெட்டுகிளிகள் 26 ஆண்டுகளில் மிக மோசமான அளவிற்கு பயிர்களை லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தாக்கி வருவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. கொரோனா பீதி ஒரு புறம் இருக்கும் நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
“சோமாலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டன. தற்போது இவை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் படையெடுத்து வந்து பயிர்களை நாசப்படுத்திவருகிறது.
“வெட்டிக்கிளிகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து வருவது இந்த ஆண்டு இந்திய விவசாயத்திற்கு பெரும் அபாயம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை அளித்துள்ளது. தம்மாத்துண்டு பூச்சி உணவு உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என உங்கள் மனங்களில் எழுவது புரிகிறது
அப்படியானால்! சூர்யா நடித்த காப்பான் எனும் தரமான படத்தை பாருங்கள். உங்களுக்கே, புரியும் சரி. இது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது நடந்துள்ள கூத்தை கேளுங்கள், ஜெய்ப்பூரில் இந்த வெட்டுகிளிகள் படையெடுத்தபோது அதனை இரும்பு பாத்திரத்தில் பிடித்துவைத்து எண்ணெயில் போட்டு பொறித்து மதுவிற்க்கு சைடிஷாக சாப்பிட்டு இருக்கிறார் ஜெய்ப்பூரை சேர்ந்த ஜெகன் என்பவர் ( வயது 24 ).
இவர் ப்ரொவி FaceBook பக்கத்தில் நமது ப்ரொவியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார் அதில் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்றும் வேலை’க்காக ஜெய்ப்பூரில் வசித்துவருவதாகவும் தெரிவித்திருந்தார் அப்போது தான் இந்த வெட்டுகிளிகள் வந்ததாகவும்! அவற்றை இவர் பொறித்து மதுவிற்க்கு சைடிஷ்’ஆக சாப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் மேலும் அவர் இன்னுமொரு வேடிக்கையான ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார் அதாவது, இவர் வி.சி.க கட்சி தலைவரின் உறவினர் என்றும் வி.சி.க கட்சி தலைவரும் இவரிடம் லோகஸ்ட் எனும் வெட்டுகிளி’யை பொரியல் செய்வதை பற்றி கேட்டறந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.