மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டிய பாட்டாளி மாணவர் சங்கத்தினர்! 💝


புதுச்சேரி : இந்த ஊரடங்கு காலத்தில், வெளி மாநிலங்களில் இருந்து புதுவையில் படிக்க வந்த மாணவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பமுடியாமல் அவதிபட்டுவந்தனர், இந்த தகவலை அறிந்த புதுச்சேரி பா.ம.க மாணவர் சங்கத்தினர், மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுடைய சொந்த மாநிலம் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்து வழியனுப்பி வைத்தனர்!
இந்த உதவிக்கு மேகாலயா மருத்துவ மாணவர், புதுவை மாநில பாட்டாளி மாணவர் சங்கதிற்க்கும், புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் அவர்களுக்கும் புதுவை மாநில பாட்டாளி மாணவர் சங்க துணை செயலாளர் ராகுல் விஜயன் மற்றும் மாணவர் சங்க நிர்வாகி அருண் அவர்களுக்கும், புதுச்சேரி மாநில அரசிற்கும் நன்றி தெரிவித்தார். 🙏