” அண்ணாத்த மற்றும் வலிமை ” தல அஜித்தின் வேண்டுகோள்! 🍥

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில். பல படங்களின் வெளியீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த தீபாவளி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தலைவர் ரஜினி’யின் அண்ணாத்த மற்றும் தல அஜித்தின் வலிமை படங்களின் படப்பிடிப்புகளும் இந்த லாக்-டவுனால் பாதிக்கப்பட்டது.

தற்போது இந்த இரண்டுபடங்களின் வெளியீடு தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 70சதவீதம் முடிவடைந்தநிலையில் மீதமுள்ள வேலைகளையும் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பொங்கல் அன்று வெளியிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ் முடிவெடுத்து தமிழக அரசிடம் சமூக இடைவெளியுடன் குறைத்த / தேவையான நடிகர் நடிகைகளை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.




மேலும் தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நடத்தவும் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் யோசனையில் இருந்ததாகவும், படத்தில் வேலைசெய்யபோகும் இயக்குனர் உதவி இயக்குனர் நடிகர் நடிகைகளின் நலன் கருதியும் இப்போது தமிழகம் இருக்கும் சூழலிலும் இநேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனர் வினோத்திடமும் அஜித் கூறியுள்ளார் மேலும் தனது கால்ஷீட்டையும் நீடித்துக்கொடுத்துள்ளாராம் தல அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *