அண்ணாத்த முதல் பார்வை எப்பொழுது – #ExclusiveReport


சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் பல நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு 70-75% சதவீதம் முடிந்துவிட்டநிலையில் . படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பையும் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இம்மான் இசையமைத்துள்ளார் இசை வேலைகளும் பாதி முடிந்துவிட்டதாம். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பென்பது எப்பொழுது படத்தின் முதல் போஸ்டர் வெளியாகும் என்பதுதான்.




இதைப்பற்றி இயக்குனருக்கு நெருங்கிய சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் தெரிவித்தது:
போஸ்டர்’காண படப்பிடிப்புகள் படம் துவங்கிய சில நாட்களிலையே எடுத்துவிட்டதாகவும்.


அதன் எடிட் பணிகளும் முடிந்து ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுருந்ததாகவும் கொரோனா காரணமாக இவற்றை தயாரிப்பு நிறுவனம் சற்று தள்ளிவைத்துவிட்டது என்கின்றனர். மேலும் படத்தின் தேதி பொங்கல் 2021 என்பதால் தற்போதைக்கு போஸ்டர் வெளியீடு இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.




மேலும் படப்பிடிப்பு துவங்குவதற்காக சிறப்பு அனுமதியை அரசிடம் கேட்டிருப்பதாகவும், அரசு உத்தரவிட்டதும் படப்பிடிப்புகளும் துவங்க ஆரம்பமாகிவிடும் என்கின்றனர். மேலும் அண்ணாத்த படத்தில் இன்னுமொரு தீம் இசை இருப்பதும் கூடுதல் தகவல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *