புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேருக்கு கொரோனா!

புதுச்சேரி: புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு MRF நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது மனைவி, மகள் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21-ஆகா அதிகரித்துள்ளது.

புதுவை கொரோனா பாத்திப்பு எண்ணிக்கையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள –
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் என்கிற கிராமத்தில் உள்ள MRF டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரைச் சேர்ந்த 36 வயதுடைய நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




மேலும் அவர் வசித்த தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய 32 வயதுடைய மனைவி, 9 வயது-மகள் மற்றும் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் அரசு-மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபருக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது என சுகாதாரத்துறை விசாரணை நடத்தியதில், அந்த நபர் தொழிற்சாலையில் பணி நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வீட்டின் அருகே காய்கறிகளை விற்று வந்துள்ளார். இதற்காக அவர் அவ்வப்போது கோயம்பேடு காய்கறி சந்தைகுக்கு சென்று வந்ததும், கோயம்பேடு சந்தை மூலமே அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *