பயணத்துக்கு தயாராகும் தமிழக அரசு பேருந்துகள்!

சென்னை : ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் பேருந்துகளை சுத்தம் செய்யும் வேலைகள் துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 17ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதன்பின்னர் மீண்டும் துவங்கப்போகும் 4ம் கட்ட ஊரடங்கு வேறமாதிரி இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அணைத்து அரசு பேரூந்துகளையும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.




இதன் தொடர்ச்சியாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக அரசு பேரூந்துகளையும் சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பணிக்கு வரும் ஊழியர்கள் கிருமி நாசினி நுழைவு வாயில் வழியாக அழைத்துவரப்பட்டு சுத்தம் செய்துவருகின்றனர்.மேலும் தமிழக அரசு பிறப்பிக்கும் உத்தரவை தொடர்ந்து எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க ஊழியர்கள் தயார்நிலையில் உள்ளனர். பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு கையுரை மற்றும் முக கவசம் , கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது எனும் தகவலை காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *