மீண்டும் தலைவர் – தல படங்கள் ஒரே நாளில்?

10.01.2019 பொங்கல் வெளியீடாக வெளியானது தலைவர் ரஜினிகாந்த் – தல அஜித் படங்கள் இரண்டுமே சக்கைபோடு போட்டு, நீண்டநாள் திரையரங்கில் ஓட்டம் கண்டது, அதிலும் குறிப்பாக தல அஜித் நடித்து வீரம் சிவா இயக்கிய படம் விஸ்வாசம் பல வருடங்கள் கழித்து குடும்பங்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து திருவிழா‘வாக மாற்றியது. இந்த படங்களின் மோதலில் தல அஜித் நடித்த விசுவாசம் படம் தமிழ்நாட்டில் நெ 1ஆகா இருந்த பாகுபலியை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதை விசுவாசம் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தரே அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தலைவர் நடித்த பேட்ட படமோ விசுவாசத்தை விட உலக அளவில் நல்ல வசூல் என்று தயாரிப்பு நிறுவனத்தை தவிர்த்து சில மற்ற விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். ஆகாமொத்தம் இரண்டு படங்களுமே தாறு மாறாக ஓட்டம் கண்டது,. தல தலைவர் படங்களின் மோதல் மீண்டும் நிகழாது என்று சிலர் பேசிவந்த நிலையில்.
மீண்டும் 2021’ல் அதே தேதியில் தலைவரின் நடிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் சண் பிக்ச்சர்ஸ் தயாரித்த படம் அண்ணாத்த மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துவரும் வலிமை படமும் மோதவுள்ளதாக சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது, இது குறித்து நமது ப்ரோவி செய்தி தொடர்பாளர் குழு விசாரித்ததில் அண்ணாத்த படம் பாதிப்படத்திற்கும் மேலான படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துவிட்டதால் இந்த படம் பொங்கல் வெளியீடு உறுதி என படக்குழு தெரிவித்திருந்தது, இந்த செய்தியை ப்ரோவி தனது டிவிட்டர் பக்கத்தில் அன்றே பதிவிற்றிருந்தது, அதை உறுதி செய்யும் வகையில் நேற்று ( 12.05.2020 ) அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலிமை படமோ, இன்னமும் பாதி படத்திற்கான படப்பிடிப்புகூட நடக்காத நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டதால் இந்த படம் பொங்கல் வெளியீடு என்பது தற்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் இல்லை என்கின்றனர் இயக்குனருக்கு நெருக்கமானார்!ஒரு வேலை ஜூன் மாதம் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று அரசு அனுமதிக்கொடுத்தால் இடைவேளை இல்லமால் படப்பிடிப்பு நடைபெறும், அப்படி நடைபெற்றால் பொங்கல் வெளியீட்டினை பற்றி யோசிக்கலாம் என்று கூறிவிட்டனராம்.

இதன்படி பார்த்தால் மீண்டும் இப்படங்களின் மோதல் என்பது கேள்விக்குறியே!?Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *