புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!


புதுவையில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவர துவங்கியுள்ளது! இன்று ( 12.05.2020 ) தகவலின்படி புதுவை அரும்பார்தபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது! இதன்படி புதுவையில் 13ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது!
புதுச்சேரியில் இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 515 குடும்பங்களுக்கு வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளன. 3,155 பேருக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,097 பேருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.