ஊரடங்கு 4.0 வேறமாதிரி இருக்கும் – பிரதமர் மோடி

4ஆவது ஊரடங்கு ” வேற வேறமாதிரி இருக்கும் ” பன்ச் பேசிய மோடி! :

இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில்! கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது! 2,350க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒன்றாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, முன்னதாக மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவானது மூன்றாம் முறையாக மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது!

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 5நாட்களே உள்ள நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. காணொளி காட்சி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்திற்கு அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீட்டித்து அதிகப்படியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று இரவு 8மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாடினார். அதில் உலகை வழிநடத்த வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்துவருகிறது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டுவந்திருக்கிறது.இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் சின்னாபின்னமாகியிருப்பது வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3லச்சம் பேர் உயிரிழந்திருப்பதும் அதீத வேதனையளிக்கிறது. இது விட்டுவிடும் நேரம்-அல்ல!

நாம் வெற்றிபெற வேண்டும். கொரோனா வைரஸ் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மிக பெரிய போர். கொரோனா உலகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது, நாம் நம்மை தற்காத்துக்கொண்டு முன்னேறி செல்லவேண்டும். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம்.
உள்ளூர் உற்பத்தி , உள்ளூர் விற்பனை , உள்ளூர் விநியோகம் – இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே 18ஆம் தேதி அல்லது அதற்க்கு முன்பாக வெளியிடப்படும்.

மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலையே 4ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *