நிதி வழங்கிய வில்லியனுர் பானு பல் மருத்துவமனை!


கொரோனா வைரஸ் பாதிப்பு படி-படியாக அதிகரித்துவரும் நிலையில், பல மாநிலங்களுக்கு பல நிறுவனங்கள் நிதி வழங்கிவருகிறது, அனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நிலைமை வேறு!
இதுவரை மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசிற்கு நிதி வரவில்லை என்று புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி தெரிவித்திருந்திருந்தார். மேலும் புதுவை அரசிற்கு நிதி வழங்க விருப்பமுள்ளவர்கள் அரசு அறிவித்திருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ தங்களது பங்களிப்பினை வழங்கலாம் என்று அவர் தெரிவித்திரிருந்தார்.
அதன்படி பலர் அவர்களால் முடிந்த பணத்தினை அரசு வங்கி கணக்கிற்கு அளித்தனர். சில தொழிற்சாலை / நிறுவனங்களும் அவர்களின் பங்களிப்பினை வழங்கிவந்தனர்! இன்று புதுவை வில்லியனுரில் உள்ள பானு பல் மருத்துவமனை சார்பாக டாக்டர். குர்ஷீட் பானு அவர்கள் முதல்வர் திரு.நாராயணசாமியை நேரில் சென்று தனது பங்களிப்பான 5000 ரூபாய் பணத்தினை கொடுத்தார். இதுகுறித்து புதுவை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்!
Dr. Kursheed Banu, Banu Dental Clinic Villianur donated ₹5000 for #COVID19 Chief Minister Relief Fund at Legislative Assembly, #Puducherry . pic.twitter.com/pxw3Dq2v0O
— V.Narayanasamy (@VNarayanasami) May 12, 2020